Skip to main content

கொழும்பு – இலங்கையின் முன்னோடி நிலைபேறான நிதி நிறுவனமான அலையன்ஸ் ஃபைனான்ஸ் கம்பனி பிஎல்சி (AFC), இலங்கை தேசிய வர்த்தக சமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 தேசிய வர்த்தகச் சிறப்படைவு விருதுகள் (NBEA) விழாவில் மூன்று மதிப்புமிக்க விருதுகளை வென்றதன் மூலம், நாட்டின் மிகவும் சிறந்த கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றாகத் தன் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

வணிகச் செயல்பாட்டின் பல பரிமாணங்களில் சிறந்து விளங்குவதை வெளிப்படுத்திய AFC நிறுவனம், மீப்பெரிய பிரிவில் (Extra-Large Category) 'வணிகம் மற்றும் நிதி முடிவுகளில் சிறந்து விளங்குவதற்கான' தங்க விருதையும், 'கார்ப்பரேட் ஆளுகை மற்றும் மூலோபாயத்தில் சிறந்து விளங்குவதற்கான' தங்க விருதையும் வென்றதுடன், வங்கியல்லாத நிதித் துறையில் இரண்டாம் இடத்தையும் பிடித்தது. இந்தச் சிறப்புமிக்க அங்கீகாரங்கள், AFC இன் நிலைபேறான வளர்ச்சி, சரியான கார்ப்பரேட் ஆளுகை, மூலோபாய தலைமைத்துவம் மற்றும் வலுவான நிதிச் செயல்பாடுகளுக்கான உறுதியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன. இது இலங்கையின் முன்னணி நிலைபேறான நிதி நிறுவனமாக நிறுவனத்தின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.

இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த அலையன்ஸ் ஃபைனான்ஸ் கம்பனி பிஎல்சியின் துணைத் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான திரு. ரொமானி டி சில்வா அவர்கள்,
“இந்த விருதுகள் எங்களது முழு குழுவின் அர்ப்பணிப்புக்கும் ஆர்வத்திற்கும் கிடைத்த சான்றாகும். நிலைபேறான நிதியின் மூலம் உலகை ஒரு சிறந்த இடமாக மாற்றுவது என்ற எங்களது உன்னதமான நோக்கத்தின் வழியே, அனைத்து பங்காளர்களுக்கும் நிலைபேறான மதிப்பை உருவாக்கும் எங்களது பயணத்தை இவர்களின் அர்ப்பணிப்பு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. அலையன்ஸ் ஃபைனான்ஸில், சிறப்பம்சமானது நிதி வெற்றியால் மட்டும் அளவிடப்படுவதில்லை, மாறாக சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தில் நாம் உருவாக்கும் நேர்மறையான தாக்கத்தின் மூலமுமே அளவிடப்படுகிறது. நமது பயணம் தொடர்ந்து தேசிய அளவில் அங்கீகரிக்கப்படுவதில் பெருமிதம் கொள்கிறோம்,” என்று கூறினார்.

தேசிய வர்த்தகச் சிறப்படைவு விருதுகள் என்பது தலைமைத்துவம், ஆளுகை, நிதிச் செயல்பாடு, நிலைபேறைத்தன்மை, கண்டுபிடிப்பு மற்றும் செயல்பாட்டுச் சிறப்பு உள்ளிட்ட முக்கிய வணிகத் துறைகளில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் இலங்கையின் மிகவும் மதிப்பிற்குரிய கார்ப்பரேட் விருதுகளில் ஒன்றாகும். ஏழு தசாப்தங்களாக, அலையன்ஸ் ஃபைனான்ஸ் நிறுவனம் மக்கள், பூமி மற்றும் லாபம் (People, Planet and Profit) என்ற முக்கோணக் கோட்பாட்டை (Triple Bottom Line) தனது வணிக மாதிரியில் ஒருங்கிணைத்து நிதியின் பங்கைத் தொடர்ச்சியாக மறுவரைறை செய்துள்ளது. முன்னோடியான நிலைபேறான நிதி முயற்சிகள், பல்லுயிர் பாதுகாப்பு, சமூகத் தாக்க முதலீடுகள் மற்றும் புதுமையான நிதித் தீர்வுகள் மூலம், நிறுவனம் தேசிய வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் அதே வேளையில் நீடித்த மதிப்பைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இந்த சமீபத்திய அங்கீகாரங்கள், AFC இன் வளரும் தேசிய மற்றும் சர்வதேச அங்கீகாரங்களின் பட்டியலை மேலும் வலுப்படுத்துவதுடன், பொறுப்புள்ள சமூகம், சிறந்த பூமி மற்றும் வலுவான தேசத்தை உருவாக்கும் அதே வேளையில் நிலைபேறான நிதிச் சிறப்பை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

அலையன்ஸ் ஃபைனான்ஸ் கம்பனி பிஎல்சி பற்றி -
1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அலையன்ஸ் ஃபைனான்ஸ் கம்பனி பிஎல்சி, இலங்கையின் பழமையான வங்கியல்லாத நிதி நிறுவனமாகும், மேலும் இது முக்கோணக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட நாட்டின் முதல் நிதி நிறுவனமும், இலங்கையின் ஒரே நிலைபேறான சான்றளிக்கப்பட்ட நிதி நிறுவனமும் (Sustainability Certified Financial Institution) ஆகும். நிலைபேறான நிதியளிப்பில் அதன் தலைமைத்துவத்திற்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்நிறுவனம், நீடித்த பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பை உருவாக்கும் புதுமையான நிதித் தீர்வுகள் மூலம் தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்களை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.